Sunday 18 July 2010

அழிந்துகொண்டிருக்கும் என் முகம்....
முகவரியில்லாத தேசத்தில் நான்
என் கனவுகள்
நிறம் மாறிக்கொண்டிருக்கின்றன
நான் நானாக இல்லை
என் சுயத்தின் அழிவு
எப்போது ஆரம்பமென்று
சரியாக தெரியவில்லைதான்
ஆனாலும் அது
என்
தோல்விகளில்தான் தொடங்கியது
அவளைப் பார்க்கும்வரை நான்
நானாகத்தான் இருந்தேன்
பார்த்தபின்னர்தான்
வேறாகிவிட்டேன்
அவளின் பார்வைகளில்தான்
என் பரிணாமவளர்ச்சியை
அறிந்து கொண்டேன்
ஆனால் அதுதான்
பரிதாபமாகவும் மாறிவிட்டது
நாம் அன்று
ஏதாவது பேசியிருந்தால்
நான் இன்று
பேசத்தேவையே இருந்திருக்காது
அன்றைய எம் மௌனம்தான்
இன்று என் புலம்பல்களை
அத்தியாயங்களுக்குள் அடங்காதவையாக்கிவிட்டது...

3 comments:

  1. நல்ல கவிதை. உணர முடிகிறது.

    காதல் தோற்பதில்லை, நாம் தான் தோற்கிறோம்

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது... உங்கள் ப்ளாக் எழுதும் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அவளின் பார்வைகளில்தான்
    என் பரிணாமவளர்ச்சியை
    அறிந்து கொண்டேன்
    ஆனால் அதுதான்
    பரிதாபமாகவும் மாறிவிட்டது

    காதலின் ஆரம்பமா இல்லை காதல் தோல்விய புரியவில்லையே
    ஆனாலும் கவி வரிகள் சூப்பர்

    ReplyDelete