எல்லாமே முடிந்துபோயிற்று
இதுவரை உன் ரயிலில்
சக பயணியாகத்தானிருந்திருக்கிரேன்
உன் நிலையம் வந்ததும்
இறங்கிக்கொண்டுவிட்டாய்
உன் பாதை வேறாகிவிட்டது
இனி
எப்போதாவது உன் நினைவுகளில்
என் ஞாபகம் வந்துவிட்டு செல்லக்கூடும்
இல்லையேல்
நம் பயணகால சினேகிதத்திற்கு
உன் இறுதி அர்ப்பணிப்பாக
உன் பிள்ளையின் பெயராய்
என் ஞாபகம் உச்சரிக்கப்படலாம்
காலவேகத்தில் பெயரின்மூலம் மறந்துபோய்
உன் நேசனினைவுகள்
பழங்கனவாய் மாறலாம்
ஆனாலும்
என் ஜீவமூச்சுக்களில்
உன் நினைவுகள் சுவாசிக்கப்படும்
இதயத்துடிப்பெல்லாம்
உன் பெயரே உச்சரிக்கப்படும்
இறுதிவரை....
என் இறப்புவரை.
காலவேகத்தில் பெயரின்மூலம் மறந்துபோய்
ReplyDeleteஉன் நேசனினைவுகள்
பழங்கனவாய் மாறலாம்
.... அருமையாக எழுதி இருக்கீங்க.
//காலவேகத்தில் பெயரின்மூலம் மறந்துபோய்
ReplyDeleteஉன் நேசனினைவுகள்
பழங்கனவாய் மாறலாம்//
மீந்து போகும் நியாபகங்கள்.. :(
நல்லாயிருக்கு பாஸ்!